Showing posts with label Articals. Show all posts
Showing posts with label Articals. Show all posts

Friday, September 5, 2014

சூனியம்...!

சூனியம்...!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியம் வைக்கப்பட்டு வஹி மூலம் அதை இறைவன் நிவாரணப்படுத்திய ஹதீஸ் பற்றிய விமரிசனங்களும் விளக்கங்களும்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட செய்தியைக் கூறும் ஹதீஸ் தொடர்பாக முன்வைக்கப்படும் விமரிசனங்களுக்கான சரியான பதில்களை இப்பகுதியில் வழங்கலாம் என நினைக்கின்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை நாம் முதலில் அறிந்து கொள்வோம்.
صحيح البخاري ـ 5766 – حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ وَهُوَ عِنْدِي دَعَا اللَّهَ وَدَعَاهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ قُلْتُ وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ جَاءَنِي رَجُلَانِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ رِجْلَيَّ ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الْأَعْصَمِ الْيَهُودِيُّ مِنْ بَنِي زُرَيْقٍ قَالَ فِيمَا ذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ قَالَ فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ ثُمَّ رَجَعَ إِلَى عَائِشَةَ فَقَالَ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَأَخْرَجْتَهُ قَالَ لَا أَمَّا أَنَا فَقَدْ عَافَانِيَ اللَّهُ وَشَفَانِي وَخَشِيتُ أَنْ أُثَوِّرَ عَلَى
النَّاسِ مِنْهُ شَرًّا وَأَمَرَ بِهَا فَدُفِنَتْ
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூனியம் செய்யப்பட்டார்கள். ஓன்றை செய்ததாக நபியவர்கள் நினைப்பார்கள் ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. நபியவர்ளின் நிலை இவ்வாறே இருந்தது. ஒரு நாள் நபியவர்கள் அல்லாஹ்விடம் துஆச்செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் நபியவர்கள் என்னிடம் "ஆயிஷாவே உனக்குத் தெரியுமா? நான் எந்த விடயத்தில் அல்லாஹ்விடம் தீர்ப்புக் கேட்டேனோ அல்லாஹ் எனக்கு அந்த விடயத்தைக் காட்டித்தந்து விட்டான்" எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் அது என்ன என்று நான் கேட்டேன்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இருவர் என்னிடம் வந்தார்கள். ஒருவர் என் தலைக்குப்பக்கத்திலும் மற்றையவர் என் கால்களுக்குப்பக்கத்திலும் அமர்ந்தனர். பின்னர் அவர்களிலொருவர் மற்றையவரிடம் " இவருக்கு ஏற்பட்ட நோய் என்ன?" எனக் கேட்டார். அதற்கு மற்றையவர் "இவருக்கு சூனியம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார். அதற்கு மற்றையவர் "இவருக்கு சூனியம் வைத்தவர் யார்? எனக் கேட்க, "ஸூரைக் கோத்திரத்தைச் சேர்ந்த லபீதிப்னுல் அஃஸம் என்ற யூதர் தான் இவருக்கு சூனியம் செய்தார்" என்று அடுத்தவர் கூறினார்.
"இவருக்கு எதிலே சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என அவர் மீண்டும் கேட்க, "முடிகள், சீப்பு ஆகியவற்றில் சூனியம் செய்து அவற்றை ஒர் ஆண் பேரீத்த மரத்தின் பாலைக்குள் வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். "அந்தப்பாலை எங்கேயுள்ளது?" என்று மீண்டும் அவர் கேட்கவே, "அர்வான் என்ற கிணற்றுள் அது வைக்கப்பட்டுள்ளது" என்று மற்றையவர் கூறினார்.
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் அந்தக்கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த பேரீத்தம் கொப்புகளைப்பார்த்து விட்டு ஆயிஷா நாயகியிடம் திரும்பி வந்து "சூனியம் வைக்கப்பட்டுள்ள அக்கிணற்றின் நீர் மருதானி கலந்தது போன்றிருந்தது. அந்த பேரீத்தம் கொப்புகள் ஷெய்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன." என்று கூறினார்கள். இதைக் கேட்ட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் " அல்லாஹ்வின் தூதரே நீங்கள் அவற்றை வெளியெடுத்தீர்களா?" எனக்கேட்டார்கள். அதற்கு "இல்லை" என்று பதில் கூறிவிட்டு "அல்லாஹ் என்னை குணப்படுத்திவிட்டான். எனவே மக்களுக்கு மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்துவதை நான் வெறுக்கிறேன்" என்று சொல்லி விட்டு அதைப் புதைக்குமாறு நபியவர்கள் ஏவினார்கள்". (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி)
இந்த சம்பவம் புஹாரியில் வார்த்தை வித்தியாசங்களுடன் பல இடங்களில் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் நமக்குப்பல படிப்பினைகளுள்ளன. நபியவர்கள் தனக்குச் சூனியம் செய்யப்பட்டிருந்த அந்தப் பொருட்களைப் பிரித்துப் பார்க்கவுமில்லை. வெளியிலெடுக்கவுமில்லை. பார்த்து விட்டு வருகிறார்கள். சூனியமென்பது அவிழ்க்கப்பட்டால்தான் குணமாகும் என்ற தவறான நம்பிக்கையை இந்த ஹதீஸ் உடைக்கிறது. ஒருவருக்கு நோயேற்பட்டால் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்திக்கும் போது அல்லாஹ் குணப்படுத்துவான்.
சூனியத்தை அவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இந்த ஹதீஸ் மிகப்பெரும் சான்றாகவுமுள்ளது. அத்துடன், ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டிருப்பின் அதை சூனியக்காரன்தான் எடுக்க வேண்டும் என்பது பொய்யென்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகின்றது. ஒருவருக்கு நோயேற்படுவதற்கு கிருமிகள், சூழல், மனோநிலை போன்றன காரணமாகின்றதைப் போலவே சூனியமும் ஒருவருக்கு நோயேற்படுவதற்குக் காரணமாகின்றது என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகின்றது.
இந்த ஹதீஸி அறிவிப்பாளர் வரிசையைக் குறை கூறி சிலர் இந்த ஹதீஸை விமர்சிக்கின்றனர். முஃதஸிலாக்கள் போன்ற போலிப் பகுத்தறிவுவாதிகளே இவ்வாறு இதன் அறிவிப்பாளர் வரிசையை விமர்சிப்போராகும் என்பதனால் நாம் இவ்விமர்சனத்துக்கு பதில் கூற விளையவில்லை.
ஆனாலும் தௌஹீத் சகோதரர்களில் சிலர்  இந்த ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக விமர்சிக்கின்றனர். அதுபற்றி இங்கு சிறிது ஆராய்வோம்.
மேற்படி ஹதீஸில் சில வார்த்தைக் குழப்பங்களுள்ளதாக விமரிசிக்கின்றனர்:
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாற்பது நாள்தான் இந்த நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும் ஆறு மாதங்கள்தான் நபியவர்களுக்கு இந்நோய் இருந்தது என்று சில அறிவிப்புக்களிலும் உள்ளன.
2. அதுபோலவே நபியவர்கள் அக்கிணற்றுக்குச் சென்று சூனியத்தை எடுத்தார்கள் என்று சில அறிவிப்புக்களிலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிணற்றுக்குப் போய் எடுக்கவில்லை என்று சில அறிவிப்புக்களிலும் கூறப்பட்டுள்ளது. சில அறிவிப்புக்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களை கிணற்றுக்கு அனுப்பினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே போனார்கள் எனவும் கூறப்படுகின்றது.
3. சில அறிவிப்புக்களில் நபியவர்கள் சூனியத்தை தாமாக அகற்றினார்கள் எனவும் சில அறிவிப்புக்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சூனியத்தை அகற்றுவீர்களா என்று கேட்ட போது தேவையில்லை என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான வார்த்தைக் குழப்பங்களை வைத்து இந்த ஹதீஸை சிலர் பலவீனப்படுத்துகின்றனர். ஒரு ஹதீஸைப் பொருத்தமட்டில் அதனுடைய அறிவிப்பாளர் வரிசை ஸஹீஹாக இருந்து, அந்த சம்பவம் ஸ
ஹீஹாக இருந்து அந்த ஹதீஸின் கிளைகளில் காணப்படும் இது போன்ற வார்த்தைக் குழப்பங்களை வைத்து ஹதீஸ் பலவீனப்படுத்தப்படும் முறையொன்று கிடையாது. ஏனெனில் ஒரு பக்கமளவில் நீண்டிருக்கும் ஹதீஸ்களை நீங்கள் உற்று நோக்கினால் இது போன்ற வார்த்தைக் குழப்பங்கள் அதில் காணப்படும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவியொருவரின் வீட்டில் தேன் குடித்ததாக வரும் ஹதீஸில் ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிலா? ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹா வீட்டிலா இது நடைபெற்றது என்ற கருத்து வேறுபாடுள்ளது.
அவ்வாறுதான் அத்தஹிய்யாத்திலே விரலை எவ்வாறு வைப்பது என்று பார்க்கும் போதும் சைக்கினை எனவும் அசைத்தல் எனவும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது இவ்வேறுபாடுகளை வைத்து யாரும் ஹதீஸை பலவீனப்படுத்துவதில்லை. கருத்துக்களுக்குள் பொருத்தம் காணவே முயற்சிப்பர்.
நபியவர்களின் சூரிய கிரகணத் தொழுகை தொடர்பான ஹதீஸில் நபியவர்கள் மூன்று ருகூஉ செய்ததாகவும் முஸ்லிமில் அறிவிப்புக்கள் இடம்பெறுகின்றன இதை வைத்து முழு ஹதீஸையுமே நாம் பலவீனப்படுத்துவதில்லை.
இது போன்ற பெரிய ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் இது போன்ற சில வார்த்தைக் குழப்பங்கள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹதீஸின் அடிப்படை சரியானதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். அடுத்ததாக அவ்வாறான முரண்பட்ட வார்த்தைகளைக் கூறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்களாக இருந்தாலும் மிகச்சிறந்த அறிவிப்பாளர்கள் கூறும் வார்த்தைகளை வைத்தே ஏனையவைகளை நாம் முடிவுசெய்ய வேண்டும்.
மேலே நாம் பார்த்த ஹதீஸை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து உர்வா அறிவிக்கின்றார். அவரிடமிருந்து ஹிஷாம் அறிவிக்கின்றார். ஹிஷாமிடமிருந்து உஸாமா, ஸ{ப்யான் அத்தௌரி போன்ற பலர் அறிவிக்கின்றனர். இவற்றுள் ஸ{ப்யான் அல் உயைனாவுடைய அறிவுப்புத்தான் முழுமையானதாக, நேர்த்தியானதாக இருக்கின்றது. ஆகவே இவ்வார்த்தை முரண்பாடுகளை வைத்து இந்த ஹதீஸை  நாம் பலவீனப்படுத்த முடியாது. இன்னும் இந்த ஹதீஸிற்கு வேறு சில அறிவிப்பாளர் வரிசைகளும் உள்ளன. அவைகளின் உடன்பாடு முரண்பாடுகளை வைத்தும் வார்த்தையின் பொருத்தமான வடிவத்தை முடிவு செய்யலாம். எனவே இந்த அளவுகோள் தவறானது.
PART 2
அடுத்ததாக இந்த ஹதீஸின் கருத்துக்களைக் கவனித்து சிலர் இந்த ஹதீஸைப் பின்வருமாறு பலவீனப்படுத்துகின்றனர்:
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்ததாகக் கற்பனை பன்னுகிறார்கள் ஆனால் அதை அவர்கள் செய்திருக்கவில்லை. செய்யவில்லை என்று நினைக்கின்றார்கள் ஆனால் அதைச் செய்துள்ளார்கள். இத்தகைய பாதிப்புக்கள் ஒருவருக்கு சூனியத்தால் ஏற்பட்டிருக்குமானால் அவருடைய நபித்துவத்தில் சந்தேகம் எழ வாய்ப்புண்டு. ஏனெனில் இக்காலப்பிரிவில் வஹியாக அல்லாஹ் இறக்கியதை இல்லையென்று அவர் சொல்லியிருக்கலாம், வஹியல்லாததை வஹியென்று அவர் கூறியிருக்கலாம் ஆகவே இந்த ஹதீஸை ஏற்கமுடியாது" என்பதே அந்த வாதம்.
இந்த வாதங்களையும் ஏற்கமுடியாது. ஏனென்றால் உலகியல் ரீதியாக நபியவர்கள் ஒரு மனிதனாகவே இருந்தார்கள். மற்றைய மனிதர்களுக்கு வரும் பாதிப்புக்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் வரவே செய்தன. மறதி, ஒன்றை மாற்றிக் கூறுதல், நோய் போன்ற பலவீனங்கள் நபியவர்களுக்கும் இருந்தன. வஹி விடயத்தில் மாத்திரமே நூறு வீதம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எவ்விதத் தவறும் ஏற்படாது என்று நாம் நம்பவேண்டும்.  உதாரணமாகக் கூறுவதானால் ஸஹீஹ{ல் புஹாரியில் 460 வது ஹதீஸை எடுத்துக்கொள்வோம். அபூஹ{ரைரா (ரழி)அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்.
"ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு ரக்அத் தொழுகையில் இரண்டு ரக்அத்தோடு ஸலாம் கொடுத்து விட்டார்கள். அதற்குப் பின்னால் கோபமான முகத்தோடு ஒதுங்கி அமர்ந்து கொள்கிறார்கள். இதைப்பார்த்த நபித்தோழர்களுக்குக் குழப்பமாக இருந்தது. அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்றோர் நபியவர்களிடம் இதைப்பற்றிக் கேட்க அஞ்சினார்கள். இச்சந்தர்ப்பத்தில் ‘துல் யதைன்’ என்ற நபித்தோழர் "தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அப்போது நபியவர்கள் "நான் மறக்கவுமில்லை தொழுகை சுருக்கப்படவுமில்லை" என்று கூறுகிறார்கள். அப்போது மற்றைய நபித்தோழர்களும் இரண்டு ரக்அத் தொழுத விடயத்தைக் கூறியதும் நபியவர்கள் எழுந்து விடுபட்டவற்றைத் தொழுதார்கள். என்று அந்த ஹதீஸ் இடம் பெறுகிறது.
"இப்படி எத்தனை விடயங்களை நபியவர்கள் மறந்தார்களோ?" "மறதியால் எத்தனை விடயங்களைக் குறைத்தார்களோ?" எனக் கூறி மேற்சொன்ன வாதத்தினடிப்படையில் இந்த ஹதீஸையும் மறுக்கலாம். இவை மனித பலவீனங்களாகும். ஆனால் இந்த பலவீனங்களை வைத்து நபியவர்களின் வஹியுடைய பகுதியை நாம் குறை காண முடியாது.
இன்னும் சொல்வதென்றால், ஒரு முறை நபியவர்கள் தன்மீது ஒன்றை ஹராமாக்கிக் கொள்கிறார்கள். அல்லாஹ் உனக்கு ஹலாலாக்கியதை ஏன் நீர் ஹராமாக்கின்றீர் என்று உடனே அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கின்றான். உங்களின் மனைவியின் திருப்தியை நாடி  இப்படிச் செய்கிறீரே என்று அல்லாஹ் நபியவர்களிடம் கேட்கின்றான். ஆகவே அதை வைத்து "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி இன்னும் பலவற்றை ஹராமாக்கியிருக்கலாமல்லவா?" என்று கூறி இந்த அல்குர்ஆன் வசனத்தை மறுக்கமுடியாது.
எனவே மனிதன் என்ற அடிப்படையிலான பலவீனங்கள் நபியவர்களிடம் இருந்துள்ளன. இந்த பலவீனங்களை வைத்து நபியவர்களுக்கு வழங்கப்பட்ட வஹியைக் குறைகாண முடியாது ஏனெனில் வஹி விடயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ளது. எங்களில் ஒருவருக்கு சூனியம் வைக்கப்பட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் போன்று உடனடியாக ஜிப்ரீல் (அலை) மூலம் எங்களுக்கு சூனியத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் சொல்லித்தரப்பட மாட்டாது.
மூஸா நபியவர்களுக்கு தடியைப் போடச்சொல்லி அது பாம்பாகி உடனடியாக சூனியத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிகள் காட்டிக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் சொல்லித்தரப்படுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. நபிமார்களாயின் இதைப்போன்ற பாதுகாப்புக்களை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் ஆதாரமாகவுள்ளது.
மூஸா நபியவர்களுக்கும், ஏனையோருக்கும் கயிறு பாம்பாக விளங்கியது. ஆனால் மற்றவர்களுக்கு அதிலிருந்து விடுதலைபெற முடியவில்லை. மூஸா நபியவர்கள் விடுதலை பெற்றார்கள். இது அல்லாஹ் செய்த அற்புதமாகும். இவ்வாறுதான் நபியவர்களுக்கும் சூனியம் செய்யப்பட்டது. மற்ற மக்களால் அதிலிருந்து உடனடியாக விடுதலைபெற முடியாது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் எதில், எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் வஹி மூலம் சொல்லிக் கொடுக்கப்பட்டு சூனியத்திலிருந்து உடனடியாகப் பாதுகாப்பளிக்கப்பட்டது.

Wednesday, October 24, 2012

தனித்தன்மை.....!

தனித்தன்மை.....!


http://www.marhum-muslim.com/
 
  அ.செய்யது அலீ   
இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்மணி புரட்சியின் சின்னமாக புகழாரம் சூட்டப்பட்டு பிரபல டைம் மாத இதழின் "person of the year" - "பர்ஸன் ஆஃப் த இயரில்" ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார். தவக்குல் கர்மான், யுவான் ரிட்லி, இன்க்ரிட் மாட்ஸன், நஜ்லா அலி மஹ்மூத், ஃபத்திமா நபீல், அஸ்மா மஃபூஸ், கமலா சுரய்யா என தொடர்கிறது ஹிஜாப் அணிந்த புரட்சி பெண்மணிகளின் எண்ணிக்கை.
மர்வா அல் ஸெர்பினி – ஹிஜாபிற்காக நவீன சுமைய்யாவாக மாறி தனது உயிரை தியாகம் செய்தவர். 2009- ஆண்டு இஸ்லாமிய ஃபோபியா வளர்த்துவிட்ட கொடியவன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்படடார். பிரான்சு உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முகத்தை மறைக்கும் வகையிலான நிகாபிற்கு தடைவிதித்துள்ளன.
இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 4, 2012 ஹிஜாப் தினமாக நம்மை கடந்து செல்கிறது. சர்வதேச ஹிஜாப் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் தினமாக செப்.4-ஆம் தேதியை அறிவிக்க காரணம் பிரான்சு நாட்டில் 2002 ஆம் ஆண்டு இதே தினத்தில் பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. உலகில் முதன்முறையாக ஹிஜாபிற்கு
தடை விதிக்கப்பட்ட நாட்டில் தான் ஹிஜாப் அணிந்த பெண்மணிக்கு அதிகாரப் பூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஹிஜாப் அணிவது அதிகரித்து வருகிறது. ஹிஜாபின் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டை எல்லாம் தூக்கி வீசிவிட்டு ஹிஜாப் எங்களின் தன்னம்பிகையின் அடையாளம் என கூறும் புதிய தலைமுறை முஸ்லிம் பெண்கள் உருவாகியுள்ளார்கள்.
அண்மைக் காலமாக தமிழகத்திலும், கேரளாவிலும் ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது யதார்த்தமே!
கேரளாவில் மருத்துவக் கல்லூரி ஒன்றை பார்த்த பொழுது அரபுக் கல்லூரியா? இது என்று சந்தேகம் எழுந்ததாக ஒரு எழுத்தாளர் கூறியிருந்தார். பொது சமூகத்திலும், பள்ளிக்கூடம், கல்லூரிகளிலும் முஸ்லிம் பெண்களும் அபிமானத்துடன் இன்று ஹிஜாபை அணிந்து செல்கின்றார்கள். ஹிஜாபை அணிய ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் தடுத்தால் அதனை எதிர்த்து போராடும் துணிச்சலும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மகத்தான மாற்றமாகும். அண்மையில் கர்நாடகா மாநிலத்திலும், அதற்கு முன்பு ஆந்திராவிலும் ஹிஜாபை அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து முஸ்லிம் மாணவிகளும் வகுப்பை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தியது சோசியல் நெட்வர்க் மீடியாக்களில் பரபரப்பான செய்தியானது.
முந்தைய காலக்கட்டங்களை விட முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேறிக் கொண்டிருப்பது ஹிஜாபின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர காரணமானது எனலாம். 'ஹிஜாப் அடிமைத்தனம்' என்றெல்லாம் புலம்பும் இஸ்லாத்தின் எதிரிகளின் கூக்குரல்கள் எல்லாம் இன்று செல்லாக் காசாக மாறிவிட்டன. இக்கருத்துக்களை தற்பொழுது முஸ்லிமல்லாதவர்களும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இவ்வாண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்களின் கண்ணியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஹிஜாப் அணிந்த ஈராக் நாட்டு பெண்மணி ஷைமா அல் அவாதி இஸ்லாமோ ஃபோபியோ தலைக்கேறிய இனவெறியன் ஒருவனால் கொல்லப்பட்ட பொழுது அவருக்கு ஆதரவாக பத்து லட்சம் மாற்று மதங்களைச் சார்ந்த அமெரிக்க பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.
சோசியல் மீடியாவும், தகவல் தொழில்நுட்ப த்துறையும் பெண்களின் ஹிஜாப் அணியும் உணர்விற்கு ஆக்கம் கூட்டுகின்றன. இஸ்லாமிய ஆடை அணிவதை கேவலமாக கருதிய காலம் மாறிவிட்டது. இஸ்லாத்தின் மீதான பற்றுறுதியால் பர்தா அணிந்த பெண்களை கிண்டலடிக்கும் காலமும் மலையேறிவிட்டது. ஹிஜாப் அணிந்த பெண்கள் ஏன் முகத்தை மறைக்கும் நிகாபை அணிந்த பெண்கள் கூட இன்று பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக ஆற்றி வருகின்றார்கள்.
ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகள், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்ற, வேலைக்குச் செல்லும் பெண்கள் ஹிஜாபை சுதந்திரமான ஆடையாகவே கருதுகின்றார்கள். எகிப்தில் புரட்சிக்கு பிறகு தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஃபாத்திமா நபீல் ஸ்கார்ஃபை அணிந்துவிட்டு செய்தி வாசிக்க துவங்கியுள்ளார்.
அதேவேளையில் இதர ஆடைகளைப் போலவே ஹிஜாப் மற்றும் மஃப்தாவில் புதிய ட்ரண்டுகள் மற்றும் ஃபேஷன்கள் ஊருவியுள்ளன. இதுவும் ஹிஜாபை வெகுஜன ஆடையாக மாற்ற காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய ட்ரண்டுகளும், ஃபேஷன்களும் இஸ்லாம் வரையறுத்துள்ள நிபந்தனைகளை தாண்டி செல்வதால் ஹிஜாபின் உண்மையான தாத்பரியம் அங்கே வீழ்ச்சியை சந்திக்கிறது.
மஃப்தாக்கள் பலவும் இன்று தலையில் சேர்த்து கட்டப்பட்டு கழுத்து உள்ளிட்ட பகுதிகளை வெளியே தெரியும் அளவுக்கு அணியும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பிட்ட நிறத்தில் தான் ஹிஜாபை அல்லது பர்தாவை அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. முகம், முன்கைகள் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளையும் மறைக்க கூடிய உடலுறுப்புகளை வெளியே காண்பிக்காத இறுக்கம் இல்லாத ஆடையாக இருக்கவேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிபந்தனை. ஆகவே ஹிஜாபை அணியும் முஸ்லிம் சகோதரிகள் அதன் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார், "ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது?" என்று.
தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: "ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்." என்றார்.
இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவுக் கூறுவது சாலச்சிறந்தது.
அதாஉ இப்னு அபீ ரபாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.
இவர் (ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: புகாரி)
ஆகவே ஹிஜாபை பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கும், இஸ்லாத்தின் உன்னத கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடையாக கருதுவோம்! நுகர்வுக் கலாச்சாரத்தின் புதிய பரிணாமங்களில் சிக்கி ஹிஜாபின் வரைவிலக்கணத்திற்கு விடைக்கொடுத்து விட வேண்டாம்.
[ இன்றைய இஸ்லாமிய பெண்மணிகள் ஹிஜாபை அணிவதில் பெருமை கொள்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.ஏனெனில் பர்தா அணியும் பெண்கள் ஆண்களின் அடிமை இல்லைஸ அவர்களின் கண்ணியம் அந்த பார்தாவின் உள்ளே இருப்பதை அவர்கள் அறிந்து விட்டனர் அவர்களால் சாதிக்க முடிந்தது பல அதற்க்கு தடையாக இந்த பார்தா இருக்க வில்லை.
இன்று மேற்குலகம் சுதந்திரம் என்கின்ற பெயரால் பெண்களின் மேலாடையை மட்டுமல்ல அவர்களின் உள்ளாடையையும் சேர்த்து கழட்டிவிடும் மோசமான காலகாட்டத்தை நாம் பார்க்கின்றோம் அதனால் தான் நம்மை விட மேற்குலகப் பெண்கள் தங்களுக்கு கண்ணியம் எதில் இருக்கிறது என்று ஆராய்சி செய்துப் பார்த்ததில் அது இஸ்லாத்தில்தான் இருக்கிறது என்கின்ற உண்மையை உணரத்துவங்கி விட்டனர்.
எனவே இஸ்லாமிய பெண்கள் நவீன கலாட்சாரம் என்கின்ற பெயரில் மேற்குலகம் இரக்குமதி செய்யும் அரைகுறை ஆடைகளை விட்டு விட்டு உங்களுக்கு கண்ணியத்தையும் நன் மதிப்புகளையும் பெற்றுத்தறும் ஆடையான ஹிஜாபை அணிந்து இஸ்லாமியப் பெண்கள் என்பதில் பெருமை அடைகிறோம் என்று பறைசாற்றுங்கள். -ஹமீது ஃபைசல் ]
source: www.thoothuonline.com

Monday, October 1, 2012

முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

ஒரு திரைப்படம் இன்று உலகத்தையே உலுக்கிவிட்டிக்கின்றது. உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்திக்கின்றன. இந்த நாள் வரை ஐம்பது பேர் உயிரிழந்திருக்கின்றார்கள்.
http://www.marhum-muslim.com/இத்தனை ஆர்ப்பாட்டங்களும் கொந்தளிப்புகளும். முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்றால் யார்?
என்ன அது, 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் வாழ்ந்த வாழ்க்கை வழிகாட்டியா?
இத்துணை நூற்றாண்டுகள் உண்டோடி விட்ட பிறகுமா, மக்கள் அவரை மறக்காது இக்கின்றார்கள்?
இத்துணை ஆண்டுகளுக்கு பிறகுமா மக்கள் அவருக்குத் தங்களின் உயிரையே கொடுக்கின்றார்கள்?
யார்தான் அவர்? எப்படிபட்டவர் அவர்?
அவர் செய்த சாதனைகள் என்ன?
அவர் சந்தித்த சோதனைகள் என்ன? போன்ற கேள்விகள் இன்று உலகெங்கும் மக்கள் மத்தியில் உரத்துக் கேட்கபடுகின்றன.
உங்களுக்குள்ளும் இந்தக் கேள்விகள் எழுந்திக்கலாம். அந்தக் கேள்விகளுக்கு விடைதான் இந்த மடக்கோலை.
யார் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)? இறைவனிடமிருந்து இத்தரணியில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகின்ற உலக மக்கள் அனைவக்ளப்பட்ட இறைத்தூதர்தாம் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மனித குல மாணிக்கமாக, அகிலங்களுக்கெல்லாம் அட்கொடையாக வாழ்ந்து சென்றவர்தாம் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
"பணம், குலம், அழகு ஆகியவற்றைப் பார்த்து மணம் முடிக்காதீர்கள்.மார்க்கத்தை பார்த்தே பெண்ணை மணம் முடித்துக் கொள்ளுங்கள்' எனச்சொல்லி அமைதியான மணவாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்.
"அரபி அல்லாதவரை விட அரபியோ, அரபியை விட அரபி அல்லாதவரோ சிறந்தவர் அன்று. உங்களில் எவர் இறையச்சம் மிக்கவரோ அவரே உங்களில்சிறந்தவர்'' என்றும்,
"பிறரைக் கீழே வீழ்த்திவிடுபவன் பலசாலி அல்ல. கோபம்வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே பலசாலி'' என்றும், சொன்னவர் தான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இறைவனின் பெயரால்...
"உழைபாளியின் வியர்வை உலரும் முன் அவருக்கு அவரது கூலியைக் கொடுக்க வேண்டும்'' என்றும் கூறி, தூமையான பொருளாதார நடைமுறைகளுக்கு வித்திட்டவர்.
"சமூகத்தின் தலைவன் சமூகத்தினரின் தொண்டனாவான்' என்றும் "பதவியை விரும்புகின்றவர்களுக்கு பொறுப்புகளைத் தராதீர்' என்றும் தீர்க்கமான கட்டளைகளைத் தந்து உன்னதமான அரசியல் வாழ்வுக்கு வழிகாட்டியவர்.
உயர்குலப் பெண் திட்டுக் குற்றத்துக்கு ஆளாகி தண்டனையும் விதிக்கபட்ட நிலையில் அவளுக்காக தோழர்கள் பரிந்து பேசியபோது "ஆளுக்கொ நீதி கடைபிடித்த சமூகங்கள் அழிந்து போனது உங்களுக்குத் தெரியவில்லையா? என் மகள் ஃபாத்திமாவே தவறிழைத்தாலும் அவளையும் தண்டிபேன்'' எனச் சூளுரைத்து நீதிக்கு உறுதியளித்தவர். இப்படி அண்ணல் நபிகளாரின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவரைக் குறித்து இறைவனே ஒரே வரியில் அறிமுகபடுத்தி இருக்கிறான். ''மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இக்கின்றீர்''. (திக்குர்ஆன் 68 : 4)
உண்மை. முற்றிலும் உண்மை. அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகிய குணங்களைக் கொண்டவராகத்தான் இந்தார். இதற்கு அவடவாழ்ந்த அவரின் மனைவியரும், தோழர்களுமே சான்றளித்திக்கின்றார்கள்.
அவற்றின் விவரம் வருமாறு:
அண்ணல் நபிகளாடபத்தைந்து ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தியவர் அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா. முதன்முதலாக இறைவனிடமிருந்து வசனங்கள் அளப்பட்ட போது பயந்து வியர்த்து விதிர்த்து வந்த அண்ணல் நபிகளாரைப் பார்த்து அன்னையார் ரளியல்லாஹு அன்ஹா சொன்ன வாசகங்களைப் பாருங்கள்:
"இறைவன் மீது ஆணையாக! இறைவன் உங்களை எந்தக்காலத்திலும் வேதனையில் ஆழ்த்த மாட்டான்.
நீங்கள் உறவுகளை மதித்தும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும் வாழ்கின்றீர்கள்.
கடனாளிகளின் கடன் சுமையைப் போக்குகின்றீர்கள்.
ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் உதவுகின்றீர்கள்.
விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்.
உண்மைக்கும் சத்தியத்திற்கும் தோள் கொடுக்கின்றீர்கள்.
துன்பத்தில் உழல்கின்ற மக்களின் துயர் துடைக்கின்றீர்கள்.''
அண்ணல் நபிகளாரின் இன்னொருமனைவி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா. அண்ணல் நபிகளாரின் மரணம் வரை அவடந்தவர். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
""அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்எவரையும் எந்தக் காலத்திலும் திட்டியதில்லை.
தனக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னித்து அவர்களுக்கும் நன்மையையே செய்து வந்திருக்கின்றார்.
சொந்த விவகாரங்களில் எவரையும் பழிக்கு பழி வாங்கியதில்லை.
எந்தவொரு மனிதரையும் அவர் சபித்ததில்லை. எந்தவொரு பணியாளரையும் பணிபெண்ணையும் கை நீட்டி அடித்ததில்லை.''
அண்ணல் நபிகளாடபாடுபட்ட உற்ற தோழர்தாம் அலீ பின் அபூதாலி (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பயணத்திலும் போரிலும் வணக்க வழிபாட்டிலும் ஆலோசனைக் கூட்டத்திலும் இணைபிரியா நண்பராக வாழ்ந்தவர்தாம் அலீ பின் அபூதாலி;
"அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மென்மையானவர்.
இளகிய மனம்கொண்டவர்கள். எந்தக்காலத்திலும் கடுமையாக நடந்து கொண்டதில்லை.
மிகவும் பரந்த மனம் கொண்டவர். ஓங்கி பேசமாட்டார்.
எந்தக் காலத்திலும் அவருடைய நாவிலிருந்து கெட்ட வார்த்தைகள் வந்ததில்லை.
எவருடைய குறையையும் துருவித் துருவி ஆராய்ந்ததில்லை.
வீண்விவாதம், அதிக பேச்சு, பயனற்ற பொழுதுபோக்கு ஆகிய மூன்றிலிருந்தும் அறவே விலகியிருந்தார்.''
''அண்ணல் நபிகளாரின் தோழர்களில் ஒவர் அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு. அண்ணல் நபிகளாரின் பணியாளராய் பல்லாண்டுகள் இந்தவர். அவர் கூறுகின்றார்:
"நான் அண்ணல் நபிகளாரின் பணியாளராக பத்து ஆண்டுகள் சேவையாற்றியிக் நாள் கூட என்னைப் பார்த்து "சே..' என்று கூட சொன்னதில்லை. அவர் சொன்ன வேலையைச் செய்ய மறந்துவிட்டாலும், அல்லது செய்யத் தவறிவிட்டாலும் கூட அவர் என்னைப்பார்த்து "ஏன் இப்படி நடந்து கொண்டா? வார்த்தைகேட்டது கிடையாது.'
அண்ணல் நபிகளாரின் அழைப்பை எதிர்ப்பதில் முன்னணியில் நின்ற அபூசுயான் ரோமப் பேரரசரிடம் அண்ணல் நபிகளாரைக் குறித்துச்சொன்னதாவது:
"முஹம்மத் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் எந்தக்காலத்திலும் கொடுத்த வாக்குறுதியை மீறியதில்லை. ஒபந்தத்தை உடைத்ததில்லை.'' இந்தச் சான்றுகள் தருகின்ற செய்தி என்ன?
இன்னொன்றையும் கேளுங்கள். அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதிலும் ஒருவரைக் கூட கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக வரலாறு கிடையாது.
கைதிகளாக பிடிபட்டவர்கள், அடிமைகள், பணியாளர்கள், ஏழைகள் ஆகிய பலவீனமான மக்களிடமும் அவர் இஸ்லாத்தைத் திணித்ததில்லை. அண்ணல் நபிகளாரை வளர்த்து பாதுகாப்பு அளித்த அவருடைய பெரிய தந்தை அபூதாலி, இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்தார். அவருடைய நெருங்கிய உறவினர்களில் பலர் இஸ்லாமியப்பிரச்சாரம் தொடங்கி பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
இஸ்லாத்தில் இணைந்தவர்கள் தங்கள் பிள்ளைகளைக்கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க அண்ணலாரிடம் அனுமதிகோரிய போது அதனை மறுத்தார். அதுமட்டுமல்ல, மக்கா நகரம் அண்ணலாரால் வெற்றி கொள்ளபட்டபோது, தமக்கும் தம் குடும்பத்தினர் மக்காவாசிகளை மனப்பூர்வமாக மன்னித்த மாண்பாளர் அவர்.
பகைவரையும் மன்னித்த அந்த பண்பாளரைப் பற்றி, மென்மைக்கு அடையாளமாய் வாழ்ந்த அந்த உத்தமரைப் பற்றி, இளகிய மனமும் ஒழுக்கசீலமும் படைத்த அந்த மாமனிதரைப்பற்றி, கனிவும் கணையும்கொண்ட, வாழ்நாளில் எவரையும் பழி வாங்காத அந்த உயர்ந்த தலைவரைப்பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமே என உங்கள் மனம் பரபரக்கின்றதா?
தொடர்பு கொள்ளுங்கள்:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு புதுச்சேரி
138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 600 012
Tel : 044 -2662 1101, Fax : 2662 0682


Website :
www.jihtn.org
அந்தரங்கம்.....அவசியம்...!

அந்தரங்கம்.....அவசியம்...!

கணவன் மனைவியின் அந்தரங்கங்களை யாரிடமும் வெளியிடக்கூடாது!
மனைவியின் அந்தரங்கத்தை மற்றவர்களிடம் சொல்லும் கணவனும், கணவனின் அந்தரங்கத்தை மற்றவர்களிடம் சொல்லும் மனைவியும் மனிதர்களிலேயே மோசமானவர்கள் என்கிறது இஸ்லாம்.
திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள். ஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும்.
மணவாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.
திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே 'இவர் இப்படித்தான்' என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்துவிட்டு 'எனக்கு இவர் வேண்டாம்' என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.
அப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டிவிடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா? என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.
திருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.
குறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.
நண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண 'ஜோக்கு'களும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். 'இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்' என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.
மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் 'அவர் எனக்காக மாற வேண்டும்' என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர்தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.
கணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். மனைவியின் அந்தரங்கத்தை மற்றவர்களிடம் சொல்லும் கணவனும், கணவனின் அந்தரங்கத்தை மற்றவர்களிடம் சொல்லும் மனைவியும் மனிதர்களிலேயே மோசமானவர்கள் என்கிறது இஸ்லாம். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம்விட்டு பேசுங்கள்.
இன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்துகொண்டு பக்கபலமாக இருந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டுவேலைகளை அதிகம் சுமத்துவது, குறைகூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜ வாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.
வீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.
திருமணம் என்பது 'நீயா நானா' போட்டியல்ல. கணவன்- மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.உடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறைவேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.
தேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Sunday, September 16, 2012

நேற்றைய கார்டூனும், இன்றைய திரைப் படமும்....!

நேற்றைய கார்டூனும், இன்றைய திரைப் படமும்....!

நபிகள் நாயகம் ஸல் அவர்களை தம் உயிரினும் மேலாக நினைப்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரண்டாம் கருத்து கிடையாது. முஸ்லிம் அல்லாத யாராவது ஒருவர், குறிப்பாக அமெரிக்க, யூத சார்புடைய யாராவது ஒருவர் நபிகள் நாயகம் ஸல் அவர்களைப் பற்றி தப்பாக , இழிவாக , பிழையாக ஏதும் சொன்னால், உணர்ச்சி வசப்பட்டு முஸ்லிம்கள் கொதித்து எழுவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அகில உலகத்துக்கும் அருட் கொடையாக வந்த அண்ணல் நபிகளாரை பழித்தால் எப்படி பொறுக்க முடியும் ? இப்படித்தான் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொல்லிக் கொடுக்கபடுகிறது !நபிகள் நாயகம் ஸல் அவர்களை பின்பற்றி வாழ்வதுதான் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதற்கு முஸ்லிம் கூறும் சாட்சியாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்களை பின்பற்றி நடப்பதுதான் அவரை மதிப்பதற்கு அடையாளம். அதே சமயம் பெரும்பாலான முஸ்லிம்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களை பின்பற்றாமல், வாழ்வதை வழக்கமாக்கி வைத்துள்ளனர். அப்படிப் பார்த்தால், பெரும்பான்மை முஸ்லிம்கள்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு மாறு செய்துகொண்டு, அவரை இழிவுபடுத்துகிறார்கள். தயவு செய்து கோபப்படாமல் மேலே படியுங்கள். நபிகள் அவர்கள் ௫ நேரம் தொழ சொல்லியுள்ளார். பெரும்பான்மை முஸ்லிம்கள் செய்வது இல்லை. நாள் நட்சத்திரம்,நல்ல நேரம் , கேட்ட நேரம் பார்ப்பது தவறு என்று நபிகள் சொல்லியுள்ளார்.பல முஸ்லிம்கள் நபி கருத்துக்கு மாறு செய்கிறார்கள். மது அருந்துதல், அன்னியப் பெண்களை இச்சையுடன் பார்த்தல் , பொய் சொல்லுதல், அண்டை வீட்டுக் காரருடன் சண்டை போடுதல் இவைகள் எல்லாம் நபிகளார் கண்டித்த, தடுத்த பெரிய பாவச் செயல்கள். இவைகளில் இன்றைய முஸ்லிம்களின் நிலை என்ன ? யோசியுங்கள். நபிகளாருக்கே பிறந்த நாள் கொண்டாடி நபிகளாரை இழிவுபடுத்தும் தவறை முஸ்லிம்கள் உலக அளவில் செய்கிறார்கள். இஸ்லாம் என்பதை வாழ்வியல் வழிகாட்டியாக நபிகளார் இவ்வுலகில் வாழ்ந்துகாட்டி விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த வாழ்வியல் முறையை மதமாக மாற்றி இஸ்லாத்திற்கே தவறான அடையாளமாக விளங்கும் பெரும்பான்மை முஸ்லிம்கள்தான் நபிகளாரை இழிவு படுத்தும் செயலில் முன் நிற்கிறார்கள். இந்த எம் முஸ்லிம் சகோதர சகோதரிகள், தாம் செய்வது தவறு என அறியாமலேயே நபிகளார் மீது புகழ் பாடும் பாடல்களையும் பாடுகிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் தமது வாழ்நாளில் தம் மீது நடத்தப் பட்ட தனி மனித தாக்குதல் அனைத்திலும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் தலை குனிந்து சென்றுள்ளதை வரலாறு சொல்கிறது. எண்ணற்ற சந்தர்ப்பங்களில் கை கட்டியே நின்றார்கள் என்பதை அவரின் வாழ்வு சொல்கிறது. ஏன் ஊரை விட்டு ஓடும் நிலைக்கும் தள்ளப்பட்டதை ஹிஜ்ரத்தும், எதிர் அணிக்கே பல விசயங்களை விட்டுக் கொடுத்த ஹுதைபியாவையும் வரலாறு பதிவு செய்துள்ளது. காரணம் இஸ்லாத்திற்கு எந்த களங்கமும் வருவதை அதுவும், முஸ்லிம்கள் அல்லாத மக்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொள்ளும் நிலை வருவதையும் நபிகளார் கவனமாக கையாண்டுள்ளார்கள்.
அன்பார்ந்த முஸ்லிம் சமூகமே, அறிவுபூர்வமாக பதிலடி கொடுக்க நாம் ஏன் ஹலாலாக பல படங்களை எடுக்க கூடாது ? நபிகளார் வாழ்வு - உலகின் சிறந்த முன் உதாரணம் என்ற நூல்களை ஏன் வீதி வீதியாக விநியோகிக்க கூடாது ? மார்க்கத்தை விளங்கியவர்களுக்கு ஓர் வேண்டுகோள்: இனி வரும் காலத்திலாவது நபிகளாரை எப்படி வாசிக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுங்கள். இன்ஷா அல்லாஹ், பெரும்பாலான பிரச்சினைகள் மறையும்
அன்புடன்
பஷீர் அகமது
தமிழ் முஸ்லிம் கல்வி மையம்
புதுக்கோட்டை
விமர்சனங்களை வென்றவர்-...!

விமர்சனங்களை வென்றவர்-...!

கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.
சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம் எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.
இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள், அல்லது கருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது. தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார், அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.
அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்ற தத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்ற தலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. இயேசு. புத்தர், ஆதி சங்கரர் விவேகானந்தர், காந்தி, போன்ற பலரும் அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களை பின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின் சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும். முஹம்மது நபி (ஸல்) பாராட்டப்படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள் அத்தனையிலும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேண்டும்.
இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர் ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார். அவன் அதை தடுக்காமலும் திருப்பி தாக்காலும் நிற்கிறான். ஏனென்று கேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது கூறியுள்ளார். நான் அந்த பழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான்.
வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவி நடந்து கொண்டிருக்கிறாள். ஏன் இப்படி என்று கேட்டால். இது முஹம்மது நபியின் உத்தரவு என்கிறாள்.
ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும் என்று சிறுவன் அடம் பிடிக்கிறான். அதை எடுத்துப் பார்த்த தந்தை இது ஹலால் அல்ல என்கிறார். சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறது. என்ன என்று விசாரித்தால் முஹம்மது (ஸல்) என்று பெயர் சொல்லப்படுகிறது.
சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன் தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான். காவலர்கள் அடித்து உதைக்கிறார்கள், அவன் பாங்கை நிறுத்தவில்லை. அவனை சிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை. சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான், கிருக்கன் என்று கூறி அவனை விடுதலை செய்கிறார்கள்.எதற்காக இப்படி என்று கேட்டால் முஹம்மது (ஸல்) கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்று அவன் பதிலளிக்கிறான்.
காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றி வாழும் ஒரு சமுதாயம், வெட்கத்தை விலை பேசி விற்று விட்ட டென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும் வரன்முறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமுதாயம். பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிற ஒரு சமுதாயம். இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில் வட்டிக்கும் முறையற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் அமரிக்க விமானங்களில் இன்னும் தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம். நேட்டோ நாடுகளின் ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைக்காக துண்டுவிரிக்கிற ஒரு சமுதாயம், சர்வதேச அளவில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அன்றாடம் அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹம்மது என்ற பெயரை இன்னும் எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்திய வெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும். அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுவதை விட்டுவிட்டு அவர் விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்கு மக்கள் தயாராக வேண்டும்.
முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும் விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்து விவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணட நிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறு. உமர் ஒரு உதாரணம் போதாதா? ஒரு கவிஞன் சொன்னது போல் முஹம்மது என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாக மாறிவிடவில்லையா? எதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கே பலமான தளத்தை அமைத்துக் கொண்டது தான் முஹம்மது நபியின் தனிச்சிறப்பு.
முஹம்மது நபி (ஸல்) தனது ஊர் மக்களிடம் “உங்களது உறவினன் நான். அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள் என்று கோரிய போது அதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள். ஆயினும் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரை தரம் தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.
முஹம்மது (ஸல்) தனது பிரச்சாரத்தின் தொடக்க முயற்சியாக கஃபா ஆலயத்தின் அருகே இருந்த சபா குன்றின் மீதேறி சப்தமிட்டு “பஹ்ர் குடும்பமே! அதீ குடும்பமே! கஃபு குடும்பமே ! இந்த மலைகனவாயினூடே உங்களை தாக்குவதற்கு ஒரு படை வரப்ப்போகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் சொன்ன வார்த்தையை வரலாறு பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. “நஅம்! மா ஜர்ரப்னா அலைக்க இல்லா சித்கன்” ஆம்! நம்புவோம்! நீர் உண்மையாளர் என்பது தான் எங்களது அனுபவம்” என்று அம்மக்கள் கூறினர். தனது சொல்லை ஏற்கச் செய்வதற்கான பீடிகியை அமைத்துக் கொண்ட பிறகு முஹம்மது ஸல்) தனது பிரச்சாரத்தை எடுத்துரைத்த போது “இதற்குத்தானா எங்களை அழைத்தாயா என்று கடிந்து கொண்ட அம்மக்கள் கடைசி வரை நபிகள் நாயகத்தின் நம்பகத் தன்மையில் குறை பேசவே இல்லை.
வரலாற்றில் ஒரு பேரதிசயமாக முஹம்மது நபியின் பிரதான எதிரியாக இருந்த அபூஜஹ்ல் “ நீ பொய் சொல்கிறாய் என்று கூறமாட்டேன்! ஆனால் உன்னை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று நபிகள் நாயகத்திடம் கூறினான். முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் அவரை சூழ்ந்திருந்த சமுதாயம் அவரது வாழ்வின் மீது எந்தப் பழிச் சொல்லையும் சொல்லவில்லை.
இறைத்த்தூதர்களைப் பற்றி அனுபவமின்மை காரணமாக மக்காவின் மக்கள் நபி (ஸல்) பற்றி, கவிஞராக இருப்பாரோ! மந்திரவாதியோ! ஒரு வேலை இதுவும் ஒரு வகை சித்த பிரமையே! என்றெல்லாம் பேச முற்பட்டார்கள் என்றாலும் அப்படிக் கூட அவர்களால உறுதியாக பேச முடியவில்லை.
மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின் முகீரா நபிகள் நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஒன்று கூடினர். “கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்” என் ஒன்றன்பின் ஒன்றாக பழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும் மறுத்தார். முஹம்மதுவிடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள் கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர். வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்து விடும். “மா அன் தும் பிகாயீலீன பிஸய்யின் பீஹி இல்லா உரிப அன்னஹூ பாதில்)
ஒரு உத்தமரை வார்த்தையால் ஊனப்படுத்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அல்ல. தங்கத்தை உரசிப் பார்த்த பொற்கொல்லனின் தீர்ப்பாக – முஹம்மது நபியின் யோக்கியதாம்சத்தை நிறுவும் சான்றாக அமைந்தது.
தங்களது ஊர்கார்ரும் மரியாதையான குடும்பத்தவரும் நாணயமிக்கவருமான முஹம்மது (ஸல்) அவர்களை ஒன்று சேர்ந்து கொன்று விடலாம் என்று தீர்மாணித்தவர்கள் கூட முஹம்மது (ஸல்) வை பழிச் சொல்லுக்கு ஆளாக்கவில்லை.
ரோமப் பேரரசர்சர் ஹிர்கல் பாரசீகத்திடம் பெற்ற வெற்றிக்கு பரிகாரமாக பாலஸ்தீனத்திற்கு நடை பயணம் வந்திருந்த போது, அங்கு முஹம்மது நபியின் கடிதம் அவருக்கு கிடைத்தது. முஹம்மது நபியை பற்றி விசாரிப்பதற்காக அவர் மக்காவிலிருந்து வந்திருக்கும் வியாபாரக் குழுவை அழைத்தார். மக்கத்து எதிர்களுக்கு நபிகள் நாயகத்தை பழி தீர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் மீது அவர்கள் பழி கூறி ஒரு வார்த்தை கூறவில்லை.
முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள், அந்த பொருளுக்கேற்பவே முஹம்மது (ஸல்) வாழ்ந்தார்.
ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றின் மீதும் களங்கத்தை பூசும் முயற்சியை ஐரோப்பிய கிருத்துவர்களே முதன் முதலாக ஆரம்பித்தனர். சிலுவை யுத்தங்களின் போது இந்த வகையான தூற்றுதல் பெருந்தூரலாக இருந்தது. தம் மனம் போனபடிக்கு நாயகத்தை பழித்துப் பேசினர். அவரைப் போர் வெறியர் என்றனர்- பெண்ணாசை கொண்டவர், மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மை அற்றவர் என்றனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த குற்ற இயல்புகளை அனைத்திற்கும் ஐரோப்பியர்களே பிறப்பிடமாக இருந்தனர். கீழ்த்தரமான, ஒழுக்கக்கேடு நிறைந்த குரூரமான செயல்களுக்கு இன்று வரை ஐரோப்பிய கிருத்துவ மேற்குலகை தவிர வேறு உதாரணம் இல்லை. இன்னும் சொல்வதானால் உலகிற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் இவற்றை தவிர வேறு எதுவும் இல்லை. ஐரோப்பிய கிருத்துவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிப் பேசிய கருத்துக்கள் பலவும் அவர்களுடைய மன விகாரத்தின் வெளிப்பாடாக அமைந்ததே தவிர, அதில் ஆத்திரமும் பொறாமையும் பொங்கி வழிந்ததே தவிர அதில உண்மை துளியும் இருக்கவில்லை. இஸ்லாமிற்கு எதிராக கிருத்துவர்களை திருப்புவதற்காக பெரும்பாலும் பாதிரிகளே இக்குற்றச் சாட்டுகளை கூறினார். அதனால் தான் அவர்கள் கூறிய குற்றச் சாட்டுக்கள் எதுவும் காலத்தின் காதுகளில் பதியவே இல்லை.
முஹம்மது நபியின் வரலாற்றின் வழக்கப்படி, அவருக்கு எதிரான குற்றச் சாற்றுகளுக்கு எதிர் தரப்பிலிருந்தே மறுப்புச் சொல்லப்பட்டது. முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களை கருத்து ரீதியில் சந்தித்து நறுக்கான பதில்களை முஸ்லிம் சமூகம் முன்வைக்கத் தவறவில்லை. ஆனாலும் முஸ்லிம் அல்லாத பிற சிந்தனையாளர்களின் தளத்திலிருந்து தரப்பட்ட பதில்கள் முஹம்மது நபியின் வாழ்வில் சத்திய வெளிச்சத்திற்கு சான்றாக அமைந்தன.
முஹம்மது நபிக்காக வாதிட்டு முஸ்லிம்கள் கூறும் பதில்களில் சமய ரீதியான அணுகுமுறை மிகைத்து இருந்தது என்றால் பிற சிதனையாளர்களின் பதில்கள் முஸ்லிம்கள் சிந்திக்காத மற்றொரு கோணத்தில் வாழ்வியல் ரிதியான எதார்த்தமான பதில்களாக அமைந்தன. “இதைக் கூடவா நீங்கள் கவனிக்கவில்லை” என எதிர்ப்பாளர்களை நோக்கி கேள்வி கேட்கிற தொனியில் அவை அமைந்திருந்தன.
மக்காவில் வலீது நட்த்திய கூட்டம் எப்படி நபிகள் நாயகத்தின் வரலாற்றுக்கு எதிர்திசையிலான புதிய பரிமாணத்தை தந்ததோ அதே போல ஐரோப்பியர்களின் குற்றச் சாட்டுகளும் முஹம்மது நபியின் வாழ்வில எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐரோப்பிய யூத காழ்ப்புணர்வின் குரூரத்தை அம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒரு தூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.
19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய உலகில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராக புயல் வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீச்சு மிகுந்த சிந்தனையாளரும் அற்புதமான பேச்சாளருமான தாமஸ் Heroes and Hero-Worship என்ற தலைப்பில் உலகின் கதாநாயகர்களைப் பற்றி தொடர் உரைகள் நிகழ்த்தினார். எடின்பரா பல்கலையில் சட்டம் பயின்ற அவரது உரைகளை மக்கள் கட்டணம் செலுத்திக் கேட்டனர். அவர் எழுதிய The Heroes என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கார்லைல் தனது உரைகளுக்கு கவிதை கதாநாயகர்க்களாக தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரையும், கதாநாயக பாதிரியாராக மார்டின் லூதரையும், கதாநாயக இலக்கிய எழுத்தாளராக ஜான்ஸனையும் ரூஸோவையும், ஆட்சியாளராக நெப்போலியனையும் தேர்வு செய்து அவர்கள் குறித்து ஆழமான கருத்துரைகளை வழங்கினார். 1840 ம் மே 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கதாநாயகர் – ஒரு தீர்க்க தரிசியாக என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இந்த தலைப்பிற்கு தீர்க்க தரிசிகளின் பட்டியலிலிருந்து மோஸேவையோ இயேசுவையோ தேர்ந்தெடுக்காமல் யாரும் எதிர்பாரத விதமாக முஹம்மது (ஸல்) அவர்களை தேர்வு செய்தார்.
வெளையர்கள் கருப்பின மக்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைபோல் அந்த கிருத்துவ சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது வெறுப்புக் கொண்டிருந்தது. தலைப்பே அவர்களை திடுக்கிட வைத்தது என்றால் தொடர்ந்து அவர் பேசிய தகவல்களில் ஐரோப்பிய மக்களுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காத்திருந்தன.
“முஹம்மதுவுக்கு எந்த வேதச் செய்தியும் வரவில்லை என்று நையாண்டி பேசிய 17 ம் நூற்றாண்டைச் சார்ந்த Hugo Grotius என்ற டச்சு கவிஞனின் கருத்தை மறுத்து தன்னுடைய உரையை தொடங்கிய கார்லைல், “It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver என்று தொடர்ந்தார்.
இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏற்பது எந்த நாகரீகமான பிரஜைக்கும் வெட்கரமானது. என்ற அவரது தொடக்கம் நேயர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது,
Hugo Grotius கற்பனையாகவும் கிறுக்குத்தனமாகவும் சொன்ன கதைகளில் கிருத்துவ உலகம் அகமகிழ்ந்து கொண்டிருந்த்து. முஹம்மது சில புறாக்களை வளர்த்தார், அந்தப் புறாக்களுக்கு அவர் நல்ல பயிற்சி கொடுத்தார். அவை அவரது தோளில் வந்து உட்கார்ந்து அவரது காதோரம் வைக்கபடுகிற தானியங்களை சாப்பிடும், அதைதான் தனக்கு வஹி இறைச் செய்தி வருவதாக அவர் என முட்டாள்தனமாக கதை கட்டி விட்டிருந்தான். Hugo Grotius. இவன் மட்டுமல்ல கிருத்துவ உலகத்தைச் சார்ந்த புத்திசாலிகள்(?) பலரும் இப்படித்தான் உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத அறிவீனமான கற்பனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்தில் நம்பியிம் பேசியும் வருகிறார்கள். இஸ்லாம் தொடர்பாக தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட அறிவீனமான கருத்துக்களை நம்பி, பேசி, அதையே விவாதம் செய்து பரப்புவதன் மூலம் அற்பமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த கிருத்துவர்கள் நிறைந்திருந்த அந்த திரளான சபையில் கார்லைல் உரத்துக் கூறினார்.
“இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடு திட்டமிட்டு நாம் உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிர ஒருபோதும் அவருக்கல்ல.”
தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் நாணயம், உள்ளத்தூயமை ஆகியவற்றை கிலாகித்துப் பேசிய கார்லைல், நபிகள் நாயகத்தின் ஒரு செயலை மிக உவப்போடு குறிப்பிட்டார்.
முஹம்மது (ஸல்) ஒரு முறை மக்காவின் தலைவர்க்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஏழை கண் தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மி மக்தி இடைமறித்து பேசினார். நபிகள் நாயகம் முகம் சுளித்தார். அப்போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கருத்தில் “ பார்வையற்றவர் தேடி வந்த போது முகம் கடுகடுத்தார் என்ற கருத்தில் இறைவசன் அருளப்பெற்றது.
அதற்கு பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) தன்னிடம் வருகிறபோது அவரை “நான் கண்டிக்கப்பட காரணமாக இருந்தவரே வருக என பாசத்தோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்பார்கள். வெளியூர்களுக்குச் சென்ற நேரங்களில் இரண்டு முறை அவரை மதீனா நகரின் பொறுப்பாளராக நியமித்தார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளை எடுத்துக் காட்டிய கார்லைல் “கதாநாயக தீர்க்கதரிசியின் உளத்தூய்மையும் நேர்மையும் இந்த அளவுக்கு இருந்தன என்று கூறினார்.
நபிகள் நாயகத்தின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லை அற்புதமான – உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒரு நியதியை எடுத்துவைத்தார்.
“முஹம்மது ஒரு ஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்க முடியாது. சரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.”
ஐரோப்பிய சமுதாயம் மட்டுமே இன்று வரை நபி (ஸல்) அவர்களது திருமணங்களை கொச்சைப் படுத்தி வருகிறது. அவரை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்க முயல்கிறது. வெட்கங்கெட்ட வாழ்கையுடையோர் உயரிய ஒழுக்கம் சார்ந்த திருமண வாழ்வை குறைகூறுவது ஏற்புடையதல்ல.
இருப்பினும், தாமஸ் கார்லை ஐரோப்பியர்களுக்கு அன்றைய பாரசீக மன்னரான கிஸ்ராவின் ஆடம்பர வாழ்வையும் ரோமச் சக்ரவர்த்தியான கைஸைரின் டாம்பீகத்தையும் நினைவு படுத்திக் காட்டுகிறார். வானத்தோடு தொடர்பு கொண்டிருந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பூமியின் மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடங்களில் அக்கறையிருக்கவில்லை என்பதை விவரிக்கிறார். சிற்றின்ப ஆசை அவரது திருமணங்களுக்கு காரணமல்ல என்பதை முஸ்லிம் அறிஞர்கள் பலவகையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
முதல் மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகே நபி (ஸல்) 10 திருமணங்களைச் செய்தார். அன்றைய அரபகத்தில் பல பெண்களை திருமணம் செய்வது சர்வசாதாரண வழக்கமாக, குறை காணப்படாததாக இருந்தது. அப்படி இருந்தபோதும் அதுவரை ஒரு மனைவியுடனேயே வாழ்ந்தார்.
நபிகள் நாயகத்தின் 50 வயதுக்குப் பின்னரே இரண்டாவது திருமணம் நடைபெற்றது. மற்ற அதிகமான திருமணங்கள் ஹிஜ்ரி 5 க்குப்பின் நடைபெற்றன. அப்போது பெருமானார் 58 வயதை கடந்து விட்டிருந்தார். இத்தனை திருமணங்களுக்குப் பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த பல பெண்களை பெருமானார் நபி (ஸல்) ஏற்க மறுத்ததை வரலாறு காட்டுகிறது.
நபி(ஸல்) கடைசி மனைவி மைமூனா (ரலி). அவரை திருமணம் செய்து கொண்டது முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது. பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமை தழுவினார். அவருடன் மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ் (ரலி) இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளை நம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில் காரணமாக இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சித்தியாவார்.
தாமஸ் கார்லைல் மற்றவர்கள் யோசிக்காத புது வகையில் நபி(ஸல்) அவர்களின் புனித்ததை நிரூபிக்கிறார்.
“முஹம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும் சொல்லப்படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளிய இருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக அவர் இருந்தார். பல மாதங்கள் பசியால வாடிய வாழ்க்கை அவருடையது”
சத்தான உணவு, கவர்ச்சியான ஆடைகள், வசதியான தங்குமிடம், வளமான பொருளாதாரம், கவலையற்ற வாழ்க்கை ஆகியவை சிற்றின்ப உல்லாச வாழ்க்கைகு மனிதனை தூண்டுபவை. இவை எதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் கிடைக்கவில்லை என்பது எதார்த்தம்.
முஹம்மது (ஸல்) தனது எதிரிகளை முழு வீரத்தோடு எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார் என்பதை ஐரோப்பிய கிருத்துவர்களால தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முஹம்மது (ஸல்) பல யுத்தங்களுக்கு காரணமாக இருந்தார். வாள் முனையில் சமயத்தை பரப்பினார் எனப் புகார் கிளப்பினர். அவர் கற்றுக் கொடுத்த ஜிஹாத் என்ற சொல் மனித சமூகத்தின் நிம்மதியை குலைத்து விட்டதாக இப்போதும் சிலர் புலம்புகின்றனர்.
உயிர்ப்பலியை முஹம்மது (ஸல்) எவ்வளவு வெறுத்தார், அதை தடுப்பதற்க்கு அவர் மேற்கொண்ட முயற்சி என்ன? அவரது வரலாற்றை படித்தால் குறைந்த பட்சம் அவரது பொன்மொழித் தொகுப்பில் இருக்கிற ஜிஹாத் பற்றிய அத்தியாயத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கிறது.
ஒரு அரசியல் தலைவரின் முழு வாழ்வும் அப்பட்டமாக திறந்து காட்டப்படும் அதிசயம் முஹம்மது (ஸல்) அவர்களது வரலாறில் கிடைப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்காது. அந்தப் புனித வாழ்வில் மர்மத் திட்டங்கள் இல்லை, இரகசிய உத்தரவுகள் இல்லை. பொறி பறக்கும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் இல்லை.
யுத்தம் என்பது ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாதது. சில சந்தர்ப்பங்களில் அது அவசியமானதும் கூட. அத்தகைய நிர்பந்த சந்தர்ப்பங்களிலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் யுத்தம் செய்தார்.
போர்க்களத்தில் அகிம்சையை வலுயுறுத்தி முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவராகத்தான் இருக்க முடியும். ஹிஜ்ரி 5ல் நடைபெற்ற முரைசிஃ களத்தில் தோழர்களுக்கு அவர் சொன்னார். எதிரிகளை சந்திக்க ஆசைப்படாதீர்கள்! இறைவனிடம் அமைதியை பிரார்த்தியுங்கள். எதிரிகளை சந்தித்தால் முந்திக் கொண்டு வாளை உயர்த்தாதீர்கள். ஒருவேளை நீங்கள் தாமதிக்க அவர்கள் உங்கள் மீது வாள் வீசி விட்டால். அறிந்துகொள்ளுங்கள்! அந்த வாட்களின் நிழ்லில் உங்களது சொர்க்க காத்திருக்கிறது.
இன்றைய முன்னேறிய உலகில் கூட போர் மரபுகள் கடை பிடிக்கப்படுவதில்லை. இராக்கில் நூற்றுக் கணக்கான பெணகளும் குழந்தைகளும் தங்கியிருந்த பதுங்கு குழியின் வாசலை குறி பார்த்து அமெரிக்கா ஏவுகணையை வீசியது. மற்றொரு தடவை ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்றை ஏவுகணை வீசி அழித்தது.
முஹம்மது நபி உலகில் முதன் முறையாக போர் மரபுகளை சட்டமாக்கி அமுல் படுத்தியவர் ஆவார். பெண்கள், சிறுவர், முதியோர், சண்டைக்கு வராது ஆலயங்களிலிம், பதுங்கு குழுகளிலும் அடைக்கலம் தேடியிருப்பவர்களை கொல்லக் கூடாது. யாரிடமும் சண்டையிடுவதற்கு முன் அவர்களிடம் நியாயம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல. மரங்களை வெட்டக் கூடாது. விலை நிலங்களுக்கு தீ வைக்க கூடாது என்பதும் முஹம்மது (ஸல்) வரைந்து கொடுத்த போர் நியதிகளாகும்.
முஹம்மது (ஸல்) தன் வாழ்வில் 9 சண்டைகளை சந்தித்தார் என்பதை படிக்கிற நியாயவான்கள். அந்த சண்டைகளின் போது அவர் போட்ட உத்தரவுகளையும் அது கடைபிடிக்கப் பட்ட ஒழுங்கையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
முஹம்மது (ஸல்) ஆயுதங்களின் வழியே சமயத்தை பரப்பினார் என்று புலம்புவோரைப் பார்த்து திலாஸி ஒலேரி கூறுகிறார். “ஆயுத பலத்தால் மக்களை இஸ்லாமை ஏற்க முஹம்மது நிர்பந்தித்தர் என்பது சுத்தமான கற்பனையாகும். சிரிப்பை வரவழைக்க கூடியது. அது உணமையிலிருந்து வெகு தூரம் விலகிய ஆரோக்கியமற்ற வாதமாகும்.” (islam at the cross road By De Lacy O’Leary- london – 1923 )
முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை நியாயமாக எடை போடுகிற யாரும், ஓளிவு மறைவோ, சூதுவாதோ அற்ற அந்த மகத்தான வாழ்வை மதிப்பாகவே கருதுவர். அதில் பிரமிக்கவே செய்வர். இது போல தூய வாழ்வு இன்னொன்று இல்லை என்று தாமாகவே கூறுவர். – ஜி.ஜி. கெல்லட் – கூறுவதை கேளுங்கள்!
“ இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.”
முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை அவர் யார் என்ற எதார்த்தமான கேள்வியோடு வாசிக்கும் எவருக்கும் இந்த அனுபவச் சிலிர்ப்பு ஏற்படவே செய்யும். ஏனென்றால்
அந்த வாழ்வில்
· கருணைக்கு எதிரான ஒரு பார்வையில்லை
· நீதிக்கு எதிரான் ஒரு செயல் இல்லை
· ஒழுக்கத்திற்கு எதிரான் ஒரு அசைவில்லை
· பெண்களுக்கு எதிரான ஒரு ஒரு வசை இல்லை
· சிறுவர்களுக்கு எதிரான் ஒரு கடுப்பில்லை
· நேர்மைக்கு எதிரான ஒரு சூது இல்லை
· பொது நன்மைக்கு எதிரான ஒரு சிந்தனை இல்லை
· சமத்துவத்திற்கு எதிரான ஒரு சமிக்ஞை இல்லை
· சகிப்புத்தன்மைக்கு எதிரான ஒரு உத்தரவில்லை
· சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு சூழ்ச்சி இல்லை
· மொத்தமாக சொல்வதானால்
· சத்தியத்திற்கு எதிரான ஒரு சொல் இல்லை.
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். என்றார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற நூலாசிரியரான – எஸ். எச். லீடர் (-S.H. Leeder – Modern Sons of the Pharaohs)
கோவை அப்துல் அஜீஸ் பாகவி

Monday, September 3, 2012

மனிதா...விழித்தெழு....!

மனிதா...விழித்தெழு....!


http://www.marhum-muslim.com/  
MUST  READ
  முஸ்லிம்களே! முஸ்லிம்களாக வாழுங்கள்! 
[ திறமையற்ற திறமைசாலிகளே! தொழில் திறமையற்ற ஓர் இனம் இருக்குமானால், அது உங்கள் இனமே! தங்கள் நிலைமையைப் பற்றி கவலையே இல்லாத இனம் ஒன்று இருக்குமானால், அதுவும் உங்கள் இனமே! இடிவிழுந்து பாழாய்ப்போன நெற்பயிரை ஒத்தது உங்கள் இனமே!
மூதாதையர்களின் புதைகுழிகளை விற்றுக் காலங்கழிப்பவர் இருப்பாரானால், அவர்கள் நீங்களே! சமாதி (கப்ர்) வணிகஞ்செய்வதில் நீங்கள் கீர்த்தி பெற்றுவிட்டீர்கள்! இத்தன்மையுள்ள உங்களுக்கு விக்கிரகங்கள் கிடைத்துவிட்டால் அவற்றையும் விற்பனை செய்ய மாட்டீர்களா என்ன?
மவ்டீகத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிமே! உன்னை தூய்மையானவனாக ஆக்கிக் கொள்!
‘புறப்படு மகனே! இஸ்லாமிய புனிதப் பாதையில் புறப்படு! உனது உண்மையான நிலைமையை உலக மக்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இவ்வையகத்தின் வாழ்க்கைக்கு முன்மாதிரயாக இருந்து அதைச் சீர்திருத்த நீ இன்னும் தேவைப்படுகிறாய்.
இளைப்பாறும் நேரம் உனக்கு எங்கிருக்கிறது? நீ செய்ய வேண்டிய பணி இனியும் எவ்வளவோ இருக்கிறதே! ஏகதெய்வக் கொள்கையின் மெய்யொளியைப் பூரணமாக்கும் சேவைக்காக உன்னுடைய தூண்டுதல் இவ்வுலகினுக்கு இன்னும் தேவையாய் இருக்கிறதே!
உனது ஊக்கத்தின் இயக்கத்தாலே உலகவாழ்க்கை பிரகாசமடைய வேண்டும். இறைவனுடைய கலீஃபாவாக – பிரதிநிதியாக உலகில் நீயே பிரகாசிப்பாய்.’ – மகாகவி, அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி ]
உறங்கும் மனிதனே விழித்தெழு!
  மகாகவி அல்லாமா இக்பால் 
தொழுகைக்காக பாங்கு சொன்னதும் சிலர் மஸ்ஜிதை நோக்கி தொழச் செல்கிறார்கள். சிலர் இருந்த இடத்திலேயே பாங்கு சொல்லி முடியுமட்டும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர். காலையில் ‘ஃபஜ்ர்’ தொழகை நேரத்தில் எல்லோரும் எழுந்து மஸ்ஜிதுக்குப் புறப்படுகின்றனர். சிலர் ‘ஒதூ’ செய்துவிட்டு தொழுகிறார்கள். சிலர் பல் துலக்கி, முகத்தைக் கழுவி விட்டு வீட்டுக்கு விரைகின்றனர்.
முஸ்லிம்களில் வேஷதாரிகள் அதிகரித்துவிட்டனர். புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படுவோர் நம்மிடையே எண்ணற்றவர். இறைவனைப் புகழ்வதற்கும், இறை வழியில் பொருளை செலவிடுவதற்கும் நம்மிடையே இருப்பவர் மிகச்சிலரே. வாரத்தில் ஒரு நாள் ‘ஜும்ஆ’ தொழுகைக்கு மட்டும் கூட்டமாக வருகிறார்கள். மற்ற நேரங்களில் ஆளைக் காணோம். ‘ஈத் - பெருநாள்’ தொழுகையில்கூட கலந்து கொள்ளாத முஸ்லிம்கள்கூட இருக்கின்றனர்.
  பேராற்றல் மிகுந்த பேஷ் இமாம்களே! 
பேஷ் இமாம்கள் யார்? பள்ளிவாசலில் தொழுகையின் ஐவேளையிலும் முன்னின்று தொழுகை நடத்துபவர் - இப்படித்தான் எண்ணற்ற முஸ்லிம்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்? பேஷ் இமாம்கள் கூட தங்களை இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பேஷ் இமாம்களே! இதுமட்டுமல்ல உங்கள் அலுவல். முஸ்லிம்களுக்கு முன்னின்று தொழுகை நடத்துவது போல் எல்லா காரியங்களிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டுவது உங்கள் கடமை.
இன்றைய பேஷ் இமாம்களில் பலர் என்று சொல்ல வரவில்லை, சிலர் என்றே சொல்லுகிறேன். ‘பணத்தில்’ மட்டும் தான் குறியாக இருக்கின்றார்கள். (போதிய வருவாயின்றி தவிக்கும் பேஷ் இமாம்களும் இருக்கின்றார்கள்) பணக்காரர்கள் பின்னாலேயே சுற்றும் பேஷ் இமாம்கள், அவர்கள் செய்யும் குறைகளை கண்டிக்கும் தைரியம் அற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். ஏன்? அவர்கள் கொடுப்பது நின்றுபோய்விடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஏழையைக் கண்டால் ஸலாம் சொல்லாத இவர்கள் பணக்காரர்கள் தூரத்தில் வரும்போதே ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று வாயினிக்க புன்சிரிப்புடன் கூறுகிறார்கள்.
இன்றைய சமுதாயத்திற்கு துணிந்து கண்டிக்கும் பக்குவம் பெற்ற பேஷ் இமாம்கள் நிறைய தேவை. காசு ஒன்றுக்காக வாழ்வது முறையன்று. சிறந்த மதபோதகர்களாக வாழ வளர்ச்சி பெறவேண்டும். அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்கள் இன்றைய மதபோதகர்களைப்பற்றிக் கூறும்பொழுது, இறைவன் கூற்றில் வைத்துக் கூறுகிறார்.
1. முதிர்ந்த பேரறிவும், மேலான ஆராய்ச்சியும் இஸ்லாமிய மதபோதகரிடம் இல்லை.
2. உள்ளத்தை உருக்கும் தீப்பொறிகள் அவர்களது வார்த்தைகளில் இல்லை.
3. ‘பாங்கு’ சொல்லும் சடங்கு மட்டும் ஒருவாறு நடக்கிறது. ஆனால் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உணர்ச்சி அதில் இல்லை.
4. தத்துவசாஸ்திரம் மட்டும் இருக்கிறது. ஆனால் பாமரமக்களுக்கு விளங்கும் வகையில் விளக்கும் ஆற்றல் மிக்க பேரறிஞர்கள் இல்லை.
5. தொழுவோர் வரக் காணவில்லை என்று பள்ளிவாசல்கூட அழுகின்றன.
6. அதாவது, ஆரம்ப கால முஸ்லிம்களைப் போன்ற சற்குண சீலர்கள் இக்காலத்தில் இல்லை.
அவர்களின் முதற்கூற்றை கவனியுங்கள். ‘முதிர்ந்த பேரறிவு – மேலான ஆராய்ச்சி’ - இவ்விரண்டும் இன்றைய ஆலிம்களிடம் இல்லாததற்கு ‘மார்க்கப்பற்று’ அளவுக்கு மீறி இல்லாததே காரணம். ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் அவர்களிடம் பற்று காணப்படுகிறது. ஆகவே, முதிர்ந்த பேரறிவு இல்லை. அதைத் தொடர்ந்த மேலான ஆராய்ச்சியும் இல்லை. ஒருசில ஆலிம்கள் மட்டும் இஸ்லாத்தில் பற்று மிக்கவராய் இருக்கின்றனர். பற்றில்லாதவர்கள் பலபேர் இருப்பதினால், பற்று மிகுந்த எண்ணங்கள் பயன்படாமல் போகின்றன.
கவியின் இரண்டாவது குற்றச்சாட்டு என்ன? உள்ளத்தை உருக்கும் தீப்பொறிகள் (சொல்லாற்றல்) இல்லை என்பது. இதற்கும் விடை காணுவது எளிது.
முதிர்ந்த பேரறிவு இல்லை. அதைத் தொடர்ந்த மேலான மேலான ஆராய்ச்சியும் கிடையாது. அதைத்தொடர்ந்த சொல்லாற்றலும் இல்லை. உள்ளத்தில் திண்மை இருந்தால் தானே சொல்லாற்றல் இருக்கும்?
மூன்றாவது குற்றச்சாட்டு? ‘பாங்கு’ சொல்வதை ஒரு சடங்கு என்கிறார். இன்றைய நிலை அதுதான். உள்ள உணர்ச்சி ஒன்றி இருந்தால் தானே கேட்போர் இறையச்சமிகுந்து தொழுக ஓடிவருவார்கள்! பேருக்காக பாங்கு சொன்னால், தூங்கிக் கொண்டிருப்பவனுக்கு தாலாட்டு போல அமைந்து விடுகிறது.
நான்றாவது குற்றச்சாட்டின் மூலம் இன்றைய மதபோதகர்களுக்கு அறிவுரை கூறுகிறார். பாபர மக்களுக்கும் புரியும் வகையில் தத்துவங்கள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பதை எடுத்துக்கூறுகிறார்.
ஐந்தாவது – ஆறாவது மறுமொழி கூறுவது என்ன? முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தொழுவதற்கு மஸ்ஜிதுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளும் புறமும் உண்மை முஸ்லிம்களாக வாழ்பவராக இல்லை என்ற கருத்து தெரிய வருகிறது.
  குணமிக்க குடும்பத் தலைவர்களே! 
உங்களில் சிலர் வீட்டு அலுவல்களை முடித்தவுடன் காற்றுவாங்க கடறகரைக்கோ அல்லது படிப்பகத்திற்கோ அல்லது கடைத்தெரு காட்சிகளை கண்டுகளிக்கவோ செல்கிறீர்கள். சில சமயங்களில் ‘சும்மா வேலையின்றி வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இறைவனுடைய ஞாபகம் வந்ததா? அப்படி தப்பத்தவறி வந்தாலும் மஸ்ஜிதுக்குச் செல்ல மனம் வந்ததா? உலக வாழ்க்கையில் சுகம் காணவே உங்கள் மனம் விரும்புகிறது. உங்களைப் படைத்த அல்லாஹ்வை ஐவேளை தொழுவதில் உங்களுக்கு என்ன தொந்திரவு இருக்கிறதோ தெரியவில்லை! சோறு சாப்பிட்டுவிட்டு சும்மா சுகமாக – சோம்பேரிகளாய் வாழ்வதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்? ‘முஸ்லிம் பெரியவர்’ என்று உங்களை அயலவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக தலையில் அழகாக தொப்பியை அணிந்து கொண்டு, தாடி வைத்துக் கொண்டு சங்கையாக தெருவில் நடமாடுகின்றீர்கள். கோலத்தினால் மட்டும் ஒருவன் உண்மை முஸ்லிம் ஆகிவிட முடியாது என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்.
இஸ்லாத்தில் செயலே பெரிதாக மதிக்கப்படுகிறது. நன்னடத்தையே உங்களை நன்னிலைக்கு உயர்த்தும். சுத்தமான சட்டை – கைலி – தொப்பி – செருப்பு அணிந்து கொண்டு ஊர்க்கதைகளை வாய்வலிக்கப் பேசிக்கொண்டு இருந்தால் உங்களை அல்லாஹ் விருப்பத்துடன் பார்க்கமாட்டான். முஸ்லிம் என்போர் யார்? அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களையும் நம்பி வழிமுறைகளைப் பேணுபவர்களே உண்மை முஸ்லிம்கள் ஆவர்.
  திறமையற்ற திறமைசாலிகளே! 
உங்களை இப்படி அழைப்பதற்கான துணிவை எனக்குக் கொடுத்தது அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்களின் கவிதையே. முஸ்லிம்களில் ஒரு பிரிவினரை அவர் கடுமையாக சாடுகிறார். அந்த பிரிவினர் யார் என்பதை கீழே பார்த்தால் உங்களுக்குப் புரியும்!
1. தொழில் திறமையற்ற ஓர் இனம் இருக்குமானால், அது உங்கள் இனமே!
2. தங்கள் நிலைமையைப் பற்றி கவலையே இல்லாத இனம் ஒன்று இருக்குமானால், அதுவும் உங்கள் இனமே!
3. இடிவிழுந்து பாழாயப்போன நெற்பயிரை ஒத்தது உங்கள் இனமே!
4. மூதாதையர்களின் புதைகுழிகளை விற்றுக் காலங்கழிப்பவர் இருப்பாரானால், அவர்கள் நீங்களே!
5. சமாதி (கப்ர்) வணிகஞ்செய்வதில் நீங்கள் கீர்த்தி பெற்றுவிட்டீர்கள்!
6. இத்தன்மையுள்ள உங்களுக்கு விக்கிரகங்கள் கிடைத்துவிட்டால் அவற்றையும் விறபனை செய்ய மாட்டீர்களா என்ன?
கவிஞர் அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தைக் கண்டு மிகவும் உளம் வருந்தி கூறியவைகளே மேற்கண்ட வரிகள்.
உறங்கும் மனிதனே! விழித்தெழு. மவ்டீகத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிமே! உன்னை தூய்மையானவனாக ஆக்கிக் கொள்! என்பவைதான் அவர் உள்ளத்தில் பீரிட்டெழந்த கருத்துகளாகும். முஸ்லிம்களே! முஸ்லிம்களாக வாழுங்கள் என்பதுதான் அவரது முழக்கத்தின் உட்பொருள்.
கவிஞர் அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்களின் மேற்கண்ட 6 வாக்கியங்களை நோக்கி வாருங்கள். எல்லா வாக்கியங்களின் பொருளும் உங்களுக்கு விளங்கியிருக்கும். எனினும் அந்த 6 வது வாக்கியத்தை கூர்ந்து கவனியுங்கள். அவர் உள்ளத்தில் எவ்வளவு வேதனையிருந்தால் அந்த கடைசி வரியை கூறியிருப்பார்?
அவர் மனம் நொந்து கூறியிருக்கிறார். ‘விக்கிரகங்கள்’ கிடைத்துவிட்டால் அவற்றையும் விற்பனை செய்ய மாட்டீர்களா? என்று ஆற்றாத்துயரத்தோடு இக்கேள்வியைக் கேட்கிறார். இந்த இழிநிலையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளுங்கள், சோம்பலை விட்டொழிந்து சுறுசுறுப்புடன் செயலாற்றுங்கள், நீங்கள் இஸ்லாத்திதின் பெருமையைக் காப்பாற்றுங்கள் என்பதே அவரது திடமான உள்ளக்கிடக்கையாகும்.
‘முஸ்லிம்கள் அனைவரும் உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்தே தீரவேண்டும்’ என்பதே அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்களின் உணர்ச்சிக்கவிதைகள் உணர்த்துகின்றன.
  இஸ்லாமிய பற்றாளர்களே! 
உங்களின் நற்செயல்கள் மூலம்தான் உலகினர் உங்களைப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்புண்டு. இஸ்லாத்திற்குப் பெருமையுண்டு. ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்பதற்கு உங்களைப் பார்த்தல்லவா விளக்கம் பெறவேண்டும்! ‘எல்லா இனத்தாரிலும் மேலானவர்களாக இறைவன் நம்மை ஆக்கியுள்ளான்’ - இறைவனே இதற்கு தனது திருமறையில் சாட்சி பகர்கின்றான். ஆனால் இன்றைய உலகில் நாம் தாம் மேலானவர்களாக வாழ்கிறோமா? நம் நெஞ்சிலே ஐயம் பிறக்கின்றது. ஏன் இந்த ஐயம்? நமக்கு இஸ்லாமிய உறுதி இல்லை. ஆகவேதான் இந்த ஐயம் நம்மிiயே குடிபுகுந்துள்ளது.
இந்த உலகமானது நேரான முறையில் - வழியில் இயங்க முஸ்லிம்களாகிய நாம்தான் தேவைப்படுகின்றோம். நம்முடைய உண்மை நிலையினை உலகினர் விரைவில் அறிந்துகொள்ள வேண்டும். நமக்கு இளைப்பாறுகின்ற நேரம்கூட கிடையாது. ஏனெனில், நாம் இதுவரை இஸ்லாமிய வழியில் மிகவும் மெதுவாக நடந்து வந்திருக்கிறோம். இஸ்லாமிய பாதையோ மிகவும் நீளமானது. நடக்க வேண்டிய பாதையே மிகவும் அதிகம். மிகவும் பின்தங்கிய நிலையில் நம் சமுதாயம் இருக்கின்றது.
அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்கள் ‘புறப்படு மகனே! இஸ்லாமிய புனிதப் பாதையில் புறப்படு! என்று வேகமாக தட்டி எழுப்புவதுபோல் கீழ்க்கண்ட அவரது வைரவரிகள் அமைந்துள்ளன. நம்முயை பணியை மிகவும் சுறுசுறுப்புடன் செயலாற்ற நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
‘உனது உண்மையான நிலைமையை உலக மக்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை’.
‘இவ்வையகத்தின் வாழ்க்கைக்கு முன்மாதிரயாக இருந்து அதைச் சீர்திருத்த நீ இன்னும் தேவைப்படுகிறாய்’.
உனது ஊக்கத்தின் இயக்கத்தாலே உலகவாழ்க்கை பிரகாசமடைய வேண்டும்’.
‘இறைவனுடைய கலீஃபாவாக – பிரதிநிதியாக உலகில் நீயே பிரகாசிப்பாய்’
‘இளைப்பாறும் நேரம் உனக்கு எங்கிருக்கிறது? நீ செய்ய வேண்டிய பணி இனியும் எவ்வளவோ இருக்கிறதே!’
‘ஏகதெய்வக் கொள்கையின் மெய்யொளியைப் பூரணமாக்கும் சேவைக்காக உன்னுடைய தூண்டுதல் இவ்வுலகினுக்கு இன்னும் தேவையாய் இருக்கிறதே!’
நமது முன்னோர்கள் இஸ்லாமிய நற்சேவைக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்துள்ளனர். இடைக்காலத்தில் நாம் இறையை மறந்து, இறைமறையை மறந்து உலகாசையில் மதிமயங்கி வீணர்களாய் நம் தகுதியை நாமே குறைத்துக் கொண்டோம். இனியும் நாம் இப்படி சோம்பேரிகளாக காலங்கழிக்கக்கூடாது. இஸ்லாமியப் பெருமையை நம் செயல்களால்தான் உலகினுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் நம்பிக்கையிழந்து தோல்வி மனப்பான்மையுடன் நாம் உலகில் உலவுகின்றோம். இந்த மனப்பான்மை நம் நெஞ்சைவிட்டு அகலவேண்டும். வெற்றி நம்மைத் தேடிவரவேண்டும். இறைவனுக்கு மாறுசெய்யாத உண்மை அடியார்களாக உலகில் உய்ய வேண்டும். இஸ்லாமிய வெற்றி ஒன்றே நம் குறிக்கோளாகவும் - கொள்கையாகவும் - கோட்பாடாகவும் இருக்க வேண்டும். நிச்சயம் இறைவன் உதவி நமக்குக் கிட்டும். இதில் எவ்வித ஐயமும் இல்லை. உறங்கும் மனிதர்களே! விழித்தெழுங்கள்! முழங்கிடுவோம் - ‘அல்லாஹ{ அக்பர்’
-ஃபத்ஹுல் இஸ்லாம், டிசம்பர் 1969 (- மூலக்கட்டுரை வெளியாகி அரை நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும் இன்றைக்கும் இதன் கருத்துக்கள் சமுதாயத்திற்கு தேவையுடையதாகவே உள்ளது.)